சென்னை:இஸ்ரேல் போர் தாக்கம் காரணமாக தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.28) சவரனுக்கு ரூ.520 வரை அதிகரித்து, தங்கம் வாங்கும் மக்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 840 வரை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில், தங்கத்தின் முதலீடும், தங்கத்தின் தேவையும் அதிகமாக இருக்கும் நிலையில், தங்கத்தின் விலையும் தினமும் மாறுதலுக்கு உள்ளாகிறது.
இந்த நிலையில் இன்று (அக்.28) சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலையில் தங்கம் அவுன்ஸுக்கு 21.86 டாலர் என அதிகரித்து, 2,008.86 டாலராக உள்ளது. அது உள்ளநாட்டு சந்தையிலும் எதிரொலிக்க, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 வரை உயர்ந்துள்ளது.
சென்னையில், இன்று (அக்.28) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 770-க்கும், சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46 ஆயிரத்து 160-க்கும் விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.77.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77 ஆயிரத்து 500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இதேபோல தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தால், சவரன் 50 ஆயிரத்தை தொட்டுவிடும் என பொருளாதார நிபுணர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய (அக்-27) நிலவரப்படி தங்கத்தின் விலை:
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,770
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.46,160
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,240
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.49,920
- 1 கிராம் வெள்ளி - ரூ.77.50
- 1 கிலோ வெள்ளி - ரூ.77,500
இதையும் படிங்க: ஆசிய பாரா விளையாட்டு போட்டி; 100 பதக்கங்களைக் கடந்து வரலாற்று சாதனை படைத்த இந்தியா!