சென்னை:சென்னையில் இன்று (அக்.17) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.5 ஆயிரத்து 515க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.44 ஆயிரத்து 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதர சூழலை பொறுத்தும், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என பல்வேறு காரணங்களை முன் வைத்து, தங்கத்தின் விலையில் தினமும் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகி உள்ள போரின் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அன்று தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.42 ஆயிரத்து 280 ஆக விற்பனையானது.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தாக்குதல் தொடங்கியதால் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய்யில் முதலீடு அதிகமாக இருப்பதால், தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் இருந்து வருகிறது.
இந்நிலையில், 4 நாட்களுக்குப் பிறகு இன்று (அக்.17) தங்கம் விலை குறைந்து உள்ளது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.44,240க்கு விற்கப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,120க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,530க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,515க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 77.50க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.77க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.77,000க்கு விற்பனையாகிறது.