தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம்; 14 நாட்களுக்குப் பிறகு திடீர் உயர்வு! - தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம்

Today Gold Rate: தங்கத்தின் விலையானது கடந்த 14 நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று (அக்.5) காலை விலையில் திடீர் மாற்றமைடந்து, சவரனுக்கு ரூ.80 உயர்ந்து உள்ளது.

gold
14 நாட்களுக்குப் பிறகு திடீர் உயர்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 2:14 PM IST

சென்னை:சென்னையில், தங்கத்தின் விலை இன்று (அக்.5) ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.42,360க்கு விற்பனை ஆகி வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச வங்கிகளின் நிலைப்பாடு, முதலீட்டாளர்களின் முதலீடுகள், சர்வதேச அரசியல் சூழ்நிலை, உலகளாவிய சம்பவங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தினமும் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

மேலும், உலக முதலீட்டாளர்கள் டாலரில் முதலீடு செய்வது அதிகமாக இருப்பதால் தங்கத்தின் விலையானது, தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி முதல் தங்கம் விலை தனது சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. அத்துடன், கடந்த, செப்டம்பர் 28ஆம் தேதி தங்கம் மிகவும் சரிவை நோக்கி பயணித்தது. நேற்றைய தினம் வரை தங்கம் விலை குறைந்துதான் இருந்தது.

இன்றைய தங்கத்தின் விலை:சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.5,295க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.42,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி ஒரு கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.73.50க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.400 உயர்ந்து ரூ.73,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நிலவரப்பட்டியல்- (அக்.5)

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,295
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.42,360
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.5,755
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.46,120
  • 1 கிராம் வெள்ளி - ரூ.73.50
  • 1 கிலோ வெள்ளி - ரூ.73,500

இதையும் படிங்க:மீண்டும் குறைந்த சிலிண்டர் விலை..! உஜ்வாலா பயனாளிகளுக்கு தித்திப்பான அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details