சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 288 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,512 நபர்களுக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை நான்கு கோடியே 62 லட்சத்து 38 ஆயிரத்து 440 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 26 லட்சத்து 65 ஆயிரத்து 386 நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
தமிழ்நாட்டில் மேலும் 1,597 பேருக்கு கரோனா பாதிப்பு - corona cases in tn
தமிழ்நாட்டில் இன்று (அக். 1) மேலும் 1,597 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 99 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 1,623 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 12 ஆயிரத்து 684 உயர்ந்துள்ளது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் ஏழு நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 18 நோயாளிகளும் என 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 603 என உயர்ந்துள்ளது.
இதனிடையே சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 5,50,20
- கோயம்புத்தூர்- 2,42,664
- செங்கல்பட்டு - 16,88,71
- திருவள்ளூர் - 1,17,853
- ஈரோடு - 10,20,07
- சேலம் - 98,176
- திருப்பூர் - 93,107
- திருச்சிராப்பள்ளி - 76,106
- மதுரை - 74,624
- காஞ்சிபுரம் - 73,992
- தஞ்சாவூர் - 73,541
- கடலூர் - 63,437
- கன்னியாகுமரி - 61,796
- தூத்துக்குடி - 55,874
- திருவண்ணாமலை - 54,370
- நாமக்கல் - 50,680
- வேலூர் - 49,417
- திருநெல்வேலி - 48,912
- விருதுநகர் - 46,053
- விழுப்புரம் - 45,474
- தேனி - 43,428
- ராணிப்பேட்டை - 43,060
- கிருஷ்ணகிரி - 42,876
- திருவாரூர் - 40,361
- திண்டுக்கல் - 32,819
- நீலகிரி - 32,774
- கள்ளக்குறிச்சி - 30,969
- புதுக்கோட்டை - 29,758
- திருப்பத்தூர் - 29,006
- தென்காசி - 27,285
- தருமபுரி - 27,722
- கரூர் - 23,607
- மயிலாடுதுறை - 22,843
- ராமநாதபுரம் - 20,356
- நாகப்பட்டினம் - 20,507
- சிவகங்கை - 19,863
- அரியலூர் - 16,693
- பெரம்பலூர் - 11,949
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1,025
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,083
- ரயில் மூலம் வந்தவர்கள் 428