தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக 84 ஆயிரத்து 927 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 2,181 நபர்களுக்கும் தமிழ்நாட்டிற்கு வங்கதேசம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா மூன்று நபர்களுக்கும் ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா இரண்டு நபர்களுக்கும் டெல்லி, மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என 2,194 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 90 லட்சத்து 25 ஆயிரத்து 554 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 79 ஆயிரத்து 473 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் தற்போது 13,070 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,270 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 53 ஆயிரத்து 733 என உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் 7 நோயாளிகளும் தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும் என 11 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,670 என உயர்ந்துள்ளது.
மாவட்டம் வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை:
சென்னை - 2,46,339
கோயம்புத்தூர் - 58,258
செங்கல்பட்டு - 55,579
திருவள்ளூர் - 45,718
சேலம் - 33,348
காஞ்சிபுரம் - 30,358
கடலூர் - 25,561
மதுரை - 21,691
வேலூர் - 21,399
திருவண்ணாமலை - 19,647
திருப்பூர் - 19,167
தஞ்சாவூர் - 19,388
தேனி - 17,271
கன்னியாகுமரி - 17,434
விருதுநகர் - 16,832
தூத்துக்குடி - 16,513
ராணிப்பேட்டை - 16,419
திருநெல்வேலி - 16,013