தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 75 ஆயிரத்து 827 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,428 நபர்களுக்கும், சவுதி அரேபியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இரண்டு நபர்கள், கர்நாடகா, மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு திரும்பிய தலா இரண்டு நபர்கள், அஸ்ஸாமிலிருந்து தமிழ்நாடு வந்த ஒருவருக்கும் என மொத்தம் 1,437 நபர்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 86 லட்சத்து 10 ஆயிரத்து 138 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் எட்டு லட்சத்து 69 ஆயிரத்து 804 நபர்கள் தீநுண்மி நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் ஒன்பதாயிரத்து 145 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து இன்று (மார்ச் 23) 902 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்து 48 ஆயிரத்து 41 என உயர்ந்துள்ளது. அதேபோல் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனைகளில் ஐந்து பேர், தனியார் மருத்துவமனையில் நான்கு பேர் என மொத்தம் ஒன்பது பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 618 பேர் என அதிகரித்துள்ளது.
சென்னையில் 532 நபர்களும், செங்கல்பட்டில் 149 நபர்களும், கோயம்புத்தூரில் 146 நபர்களும், காஞ்சிபுரத்தில் 51 நபர்களும், தஞ்சாவூரில் 67 நபர்களும், மதுரையில் 40 நபர்களும் என அனைத்து மாவட்டங்களிலும் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.