தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு: இன்று மேலும் 639 பேருக்கு தொற்று உறுதி - TN corona positive rate

சென்னை: மகாராஷ்டிராவில் இருந்து வந்த 73 பேர், கர்நாடகா, ராஜஸ்தானில் இருந்து வந்த தலா இருவர், தெலங்கானாவில் இருந்து வந்த மூவர், ஆந்திராவிலிருந்து வந்த ஒருவர் உள்பட இன்று 639 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் இதுவரை 11 ஆயிரத்து 224 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona positive number in TN
corona positive number in TN

By

Published : May 17, 2020, 8:07 PM IST

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் உள்ள 61 ஆய்வகங்களில் 11,224 பேருக்கு நடத்தப்பட்ட சளி பரிசோதனையில் 639 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6,971 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 720 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 11,224 பேர் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 634 பேர் இன்று பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 4,172 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களில் இன்று 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 63 வயது முதியவர், 40 வயது ஆண், மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வந்த 44 வயது பெண்மணி, 45 வயது பெண்மணி ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்றுடன் வேறு சில நோய்களும் இருந்ததால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

கரோனா வைரஸ் தொற்றினால் சென்னையில் 482 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 பேரும், செங்கல்பட்டில் 28 பேரும், மதுரையில் 13 பேரும், கரூரில் 16 பேரும், சேலத்தில் 9 பேரும், சிவகங்கையில் 4 பேரும், தூத்துக்குடியில் 12 பேரும், திருநெல்வேலியில் 14 பேரும், விருதுநகரில் 4 பேரும், ரயில் மூலம் வந்த பயணிகள் தனிப்பட்ட இடத்திலிருந்து இரண்டு பேர் உள்ளிட்ட 639 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை பின்வருமாறு:

  • சென்னை -6,750
  • திருவள்ளூர்- 546
  • செங்கல்பட்டு -498
  • கடலூர் -417
  • அரியலூர் -353
  • விழுப்புரம்- 306
  • திருநெல்வேலி- 194
  • காஞ்சிபுரம்- 186
  • மதுரை -160
  • திருவண்ணாமலை- 151
  • கோயம்புத்தூர் -146
  • பெரம்பலூர்- 139
  • திண்டுக்கல் -113
  • திருப்பூர்- 112
  • கள்ளக்குறிச்சி- 95
  • தேனி -79
  • ராணிப்பேட்டை- 78
  • நாமக்கல்- 76
  • தஞ்சாவூர் -72
  • கரூர் -72
  • தூத்துக்குடி- 70
  • ஈரோடு- 70
  • திருச்சிராப்பள்ளி -67
  • தென்காசி -64
  • விருதுநகர் -51
  • நாகப்பட்டினம்- 50
  • சேலம்- 44
  • கன்னியாகுமரி- 35
  • வேலூர் -34
  • திருவாரூர் -32
  • ராமநாதபுரம் -31
  • திருப்பத்தூர் -28
  • சிவகங்கை- 26
  • கிருஷ்ணகிரி- 20
  • நீலகிரி -13
  • புதுக்கோட்டை- 7
  • தருமபுரி -5

ABOUT THE AUTHOR

...view details