தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மார்ச் 8) வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 54 ஆயிரத்து 148 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த 555 பேருக்கும், அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கும் என 556 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் மேலும் 556 நபர்களுக்கு கரோனா! - தமிழ்நாட்டில் இன்றைய கரோனா அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதியதாக 556 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 75 லட்சத்து 83 ஆயிரத்து 338 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 55 ஆயிரத்து 677 நபர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4, 018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த மேலும் 532 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 39 ஆயிரத்து 138 என உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளும், அரசு மருத்துமனையில் ஒரு நோயாளி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 12,521 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை மாட்டம் 2,37,204
கோயம்புத்தூர் மாவட்டம் 56,127
செங்கல்பட்டு மாவட்டம் 53,168
திருவள்ளூர் மாவட்டம் 44,420
சேலம் மாவட்டம் 32,816
காஞ்சிபுரம் மாவட்டம் 29,660
கடலூர் மாவட்டம் 25,238
மதுரை மாவட்டம் 21,302
வேலூர் மாவட்டம் 21,061
திருவண்ணாமலை மாவட்டம் 19,518
திருப்பூர் மாவட்டம் 18,493
தஞ்சாவூர் மாவட்டம் 18,233
தேனி மாவட்டம் 17,179
கன்னியாகுமரி மாவட்டம் 17,152
விருதுநகர் மாவட்டம் 16,690
தூத்துக்குடி மாவட்டம் 16,373
ராணிப்பேட்டை மாவட்டம் 16,256
திருநெல்வேலி மாவட்டம் 15,782
விழுப்புரம் மாவட்டம் 15,286
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 15,047
ஈரோடு மாவட்டம் 14,884
புதுக்கோட்டை மாவட்டம் 11,684
நாமக்கல் மாவட்டம் 11,848
திண்டுக்கல் மாவட்டம் 11,539
திருவாரூர் மாவட்டம் 11,413
கள்ளக்குறிச்சி மாவட்டம் 10,910
தென்காசி மாவட்டம் 8,576
நாகப்பட்டினம் மாவட்டம் 8,648
நீலகிரி மாவட்டம் 8,382
கிருஷ்ணகிரி மாவட்டம் 8,194
திருப்பத்தூர் மாவட்டம் 7,646
சிவகங்கை மாவட்டம் 6,807
ராமநாதபுரம் மாவட்டம் 6,488
தருமபுரி மாவட்டம் 6,665
கரூர் மாவட்டம் 5,518
அரியலூர் மாவட்டம் 4,747
பெரம்பலூர் மாவட்டம் 2,286
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 955
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,044
ரயில் மூலம் வந்தவர்கள் 428