சென்னை:தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியானது செப்டம்பர் 18ஆம் தேதி திங்கட்கிழமை வருவதால், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால், சென்னையில் உள்ள பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க துவங்கிவிட்டனர்.
தற்போது, இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு, வெளியூா் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று (செப்.15) இரவு 8 முதல் 10 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில்களை, குறைவாக நேர இடைவெளியில் இயக்கப்பட உள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வெள்ளிக்கிழமையான இன்று (செப்.15) இரவு 8 முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இரு வழித்தடத்திலும் 9 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுவதற்கு பதிலாக, 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை (செப்.18) கொண்டாடுவதை முன்னிட்டு அன்றைய தேதியில், தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளன.
இதனையடுத்து சனி, ஞாயிறு (செப்.16 மற்றும் 17) மற்றம் திங்கட்கிழமை (செப்.18) விநாயகா் சதுா்த்தி எனத் தொடா்ந்து 3 நாள்கள் தொடா் விடுமுறையை வருகின்றன. இதனால், சென்னையில் தங்கி வேலை செய்யும் பலர் தங்களது சொந்த ஊருக்கு ரயில் மற்றும் பேருந்தில் செல்வார்கள். ஆகையால், பயணிகளின் வசதிகாக மெட்ரோவில் உள்ள 2 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கவும், முன்னதாக 9 நிமிட இடைவெளியில் ஒரு ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (செப்.15) மட்டும் 6 நிமிட இடைவேளையில் கூடுதலாக ரயில்கள் இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மெட்ரோ அறிவிப்பில், இன்று (செப்.15) மட்டும் இரவு 10 மணி வரை ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில் நெரிசல்மிகு நேரங்களான இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளன.
இதையும் படிங்க: தருமபுரியில் 16 ஆண்டுகள் ஓடாத தேர்; சீரமைக்கும் பணியைத் துவங்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு!