தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai Crime News: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் போலீஸ்.. தாயை ஏமாற்றிய மகன் கைது.. - நொலம்பூர் போலீசார்

Today Chennai Crime News: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி, உதவி தொகையை கொடுக்காமல் தாயையும், நீதிமன்றத்தை ஏமாற்றி வந்த மகன் கைது உள்ளிட்ட சென்னை குற்றச் செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்..

சென்னை மாநகர் குற்றங்கள்
சென்னை மாநகர் குற்றங்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 7:15 PM IST

சென்னை:ராயபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சிறுமி காலை நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது அதே குடியிருப்பைச் சேர்ந்த 55 வயதான ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரான ஜெபக்குமார், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, தனது பெற்றோரிடம் இது குறித்து கூறவே, சிறுமியின் பெற்றோர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்று கொண்ட ராயபுரம் காவல் துறையினர், ஜெபக்குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெபக்குமார் 2019ஆம் ஆண்டு தாமாக முன்வந்து விஆர்எஸ் பெற்று ஓய்வு பெற்ற அதிகாரி என்பது குறிப்பிடதக்கது.

தலைமறைவாக மேஜிஷியன் கைது:உதவி தொகை கொடுக்காமல், மகன் வீட்டை காலி செய்து விட்டுச் சென்றதால் பாதிக்கப்பட்ட தாய் சோனா என்பவர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். அதனை தொடர்ந்து நீதிமன்றம் அவரது மகன் திலீப்ராஜூவை கண்டுபிடித்து, உதவி தொகையை பெற்றுத் தருமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது.

ஆனால் நொளம்பூர் காவல் துறையினர், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் தாயார் சோனா மீண்டும் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிமன்றம் திலீப்ராஜூவை 15 நாள்களுக்குள் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், காவல் துறை குறிப்பிட்ட நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், சென்னை காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் துறையினர் திலீப்பை தீவிரமாக தேடிவந்தனர். அவரை பற்றி தகவல் எதுவும் கிடைக்காததால் நொலம்பூர் காவல் துறையினர் அவரது மனைவி மஞ்சுகீதா செல்போன் எண்ணை கண்டுபிடித்து அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

அப்போது, அவர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகின்றது. உடனே காவல் துறையினர் மஞ்சு செல்போன் எண்ணை வைத்து அவர் வேலை செய்யும் அலுவலகம் மற்றும் வீட்டை கண்டுபிடித்தனர். இறுதியில் திலீப்ராஜூ செவ்வாபேட்டை அருகேவுள்ள பண்ணைத் தோட்டத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை காவல் துறையினர் இன்று (செப்.23) செவ்வாய் பேட்டை பண்ணை தோட்ட வீட்டிற்குச் சென்று திலீப்ராஜூ கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவால் நிகழ்ந்த கொலை.. மாமியார் வீடு முன் தலையை வீசிய கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details