சென்னை:சென்னையில் இன்று (ஆக.29) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, 44,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும், சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கமாகவே இருந்து வருகிறது.
அமெரிக்காவின் வங்கிகள் திவாலான நிலையில் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயத்தி வருகிறது. அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுபடுத்த இதுவும் ஒரு காரணமாக அமைய, இதனால் உலகம் முழுவதும் அமெரிக்க டாலர் நிகரில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் அடைந்து வருகிறது.
இதன் காரணமாக, இந்த மாதத்தொடக்கத்தில் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 1.5% முதல் 2% வரை குறைந்து இருந்தது. மேலும், கடந்த மே மாதத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்திருந்தது. அதனுடன் ஓப்பிடுகையில், இம்மாதத்தில் தங்கத்தின் விலை மே மாதத்தை விட சுமார் 5% வரை குறைந்து உள்ளது. இந்த நிலையில், தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து பெரிதும் மாற்றமின்றி விற்பனை ஆகிவந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது அதிகரித்தது உள்ளது.