சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 73 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆயிரத்து 929 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 79 லட்சத்து 72 ஆயிரத்து 729 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் இதுவரை 25 லட்சத்து 77 ஆயிரத்து 237 நபர்களுக்கு கரோனா தொற்றுப் கண்டறியப்பட்டது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்து 427 பேர், மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனாவால் 23 பேர் உயிரிழப்பு
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 22 ஆயிரத்து 470 ஆக உயர்ந்துள்ளது. தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகளில் 23 பேர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,39,856
கோயம்புத்தூர் - 2,31,405
செங்கல்பட்டு - 1,63,031
திருவள்ளூர் - 1,14,280
சேலம் - 94,145
திருப்பூர் - 88,596
ஈரோடு - 95,245
மதுரை - 73,694
காஞ்சிபுரம் - 72,066
திருச்சிராப்பள்ளி - 73,065
தஞ்சாவூர் - 68,802
கன்னியாகுமரி - 60,391
கடலூர் - 61,073
தூத்துக்குடி - 55,244
திருநெல்வேலி - 48,111
திருவண்ணாமலை - 52,478
வேலூர் - 48,287
விருதுநகர் - 45,609