சென்னை:மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஆகஸ்ட் 16) கரோனா குறித்த புள்ளி விவரத்தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 994 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,851 நபர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 3 கோடியே 90 லட்சத்து 74 ஆயிரத்து 589 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 25 லட்சத்து 90 ஆயிரத்து 632 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 20 ஆயிரத்து 370 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரோனாவிலிருந்து மீண்டு இன்று 1,911 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 35 ஆயிரத்து 715ஆக உயர்ந்துள்ளது. இன்று சிகிச்சைப் பலனின்றி 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை - 5,41,402
கோயம்புத்தூர் - 2,33,022
செங்கல்பட்டு - 1,63,834
திருவள்ளூர் - 1,14,822
சேலம் - 94,946
திருப்பூர் - 89,199
ஈரோடு - 96,417
மதுரை - 73,808
காஞ்சிபுரம் - 72,312
திருச்சிராப்பள்ளி - 73,550
தஞ்சாவூர் - 69,528
கன்னியாகுமரி - 60,596
கடலூர் - 61,554
தூத்துக்குடி - 55,319
திருநெல்வேலி - 48,277
திருவண்ணாமலை - 52,815
வேலூர் - 48,486
விருதுநகர் - 45,663