சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக, ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 573 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் புதிதாக 1152 நபர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 4 கோடியே 91 லட்சத்து 32 ஆயிரத்து 122 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம், 26 லட்சத்து 92 ஆயிரத்து 949 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் என்று 13 ஆயிரத்து 531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1392 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 43 ஆயிரத்து 431ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 15 நோயாளிகளும் என 19 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 987 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,53,509
கோயம்புத்தூர் - 2,45,647
செங்கல்பட்டு - 1,70,950
திருவள்ளூர் - 1,19,039
ஈரோடு - 1,036,96
சேலம் - 99,351
திருப்பூர் - 94,737
திருச்சிராப்பள்ளி 77,142
மதுரை - 75,080
காஞ்சிபுரம் - 74,678
தஞ்சாவூர் - 74,935
கடலூர் - 63,915
கன்னியாகுமரி - 62,203
தூத்துக்குடி 56,192
திருவண்ணாமலை - 54,808
நாமக்கல் - 51,823
வேலூர் - 49,721
திருநெல்வேலி - 49,267