செங்கல்பட்டு: தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் பிரதான சாலையில் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக தாம்பரம் வட்டாட்சியர் சரவணன் தலைமையில் வருவாய் துறையினர், காவல் துறையினர் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்ற வந்தனர். அப்போது, அந்தப் பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வருவாய் துறையினருக்கு பெண்கள் எதிர்ப்பு - sengalpattu
தாம்பரம் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற வந்த வருவாய் துறையினருக்கு, எதிர்ப்பு தெரிவித்த பெண்களுக்கும், காவல் துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
வருவாய் துறையினருக்கு, எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்
அப்போது, அங்கு இருந்த பெண்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டபோது காவல் துறையினருக்கும் பெண்களுக்கும் இடையை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், காவல் துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் பெண்கள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கரோனா எழுச்சி - முன்னெச்சரிக்கையை பின்பற்றுவது தான் சிறந்த வழி