தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தாண்டு கொண்டாட்டம் அல்ல; குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம்! - To the Citizenship Amendment Act

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் புத்தாண்டின்போது மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர்
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர்

By

Published : Jan 1, 2020, 9:02 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் நள்ளிரவில் சென்னை சைதாப்பேட்டையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இதில், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள், மனிதநேய ஜனநாயக கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள், பொதுமக்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர்

இதுதொடர்பாக பேசிய மனித நேய ஜனநாயக கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, "மத்திய அரசின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக 2020ஐ போராட்ட ஆண்டாக எதிர்கொண்டுள்ளோம். கேரள சட்டப்பேரவையில் இந்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதைப் போல நடைபெறவிருக்கிற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இதனை தினிக்க முயன்றால் சட்ட மறுப்பு இயக்கத்தையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் முன்னெடுப்போம். நெல்லை கண்ணனின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, யாகாவராயினும் நாகாக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: நள்ளிரவு முதல் ரயில் கட்டணம் உயர்வு

ABOUT THE AUTHOR

...view details