தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் - ஆதவன் தீட்சண்யா

சென்னை: ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணத் தொகையை அரசு வழங்க வேண்டுமென முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா கோரிக்கை வைத்துள்ளார்.

cm meet
cm meet

By

Published : Jun 28, 2021, 10:19 PM IST

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, 5 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கடந்த ஆட்சியில் எழுத்தாளர்கள் மீதும் நாட்டுப்புற கலைஞர்கள் மீதும் பொய்யான வழக்குகள் போடப்பட்டதை திமுக தலைமையிலான அரசு ரத்து செய்தது வரவேற்கதக்கது.

நாட்டுப்புற கலைஞர்கள் மக்களின் பொது பிரச்னைகள் குறித்தும் தங்களது கருத்துக்கள் குறித்தும் தெரிவிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 1,064 நாட்டுப்புற கலைகள் உள்ளது. சுமார் ஏழு லட்சம் பேர் கொண்ட நாட்டுப்புற கலைஞர்கள், அவர்களுக்கென அமைக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில், சுமார் 48 ஆயிரம் பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். அந்த நல வாரியமும் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கிறது.

எனவே பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு நிவாரண தொக வழங்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கிராமங்களில் சென்று நடத்தக்கூடிய கலை நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்கு நேர கட்டுப்பாடுகளை அறிவிக்கக்கூடாது என்றார்.

இதையும் படிங்க: நாட்டுப்புற கலைக்கு அனுமதி கோரி மேளதாள இசையுடன் சென்று மனு

ABOUT THE AUTHOR

...view details