தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, அரசின் சார்பில் போர்க்கால அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நேற்று முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அத்துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.