சென்னை: தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பொங்கலை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் போகிப் பண்டிகையின்போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, போகியின்போது பொதுமக்கள் எரிக்கப்போகும் பழைய துணி, டயர், ரப்பர் ட்யூப், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்க முடிவு செய்தது. அதற்காக, தாம்பரம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இடம் தேர்வு செய்து, பொதுமக்களிடமிருந்து பழைய பொருட்களை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.