தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! - about 2020 neet exam details

சென்னை: மருத்துவ இளங்கலை படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

to-apply-2020-neet-exam-today-december-31st-is-last-day
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

By

Published : Dec 31, 2019, 1:40 PM IST

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிரது.

இதற்காக கடந்த 2ஆம் தேதியிலிருந்து இன்றுவரை (31ஆம் தேதி) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

நீட் தேர்விற்கான தேர்வு கூட நுழைவுச்சீட்டு வரும் 2020ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மே மாதம் 3ஆம் தேதி நீட் தேர்வு, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை 720 மதிப்பெண்களுக்கு நடைபெறவுள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்தாண்டு நீட் தேர்வினை எழுதுவற்கு கடும் நிபந்தனைகளையும், விண்ணப்பம் செய்வதற்கு அதிகளவிலான கெடுபிடிகளும் விதிக்கப்பட்டன. 2018 ஆண்டை விட இந்தாண்டு (2019) மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பம் செய்திருக்கலாம் என தெரிகிறது.

இதையும் படியுங்க:

அமெரிக்க பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு நீட் பயிற்சி!

ABOUT THE AUTHOR

...view details