சென்னை:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2021இல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்விற்கு உரிய தாள் 2க்கான தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலம் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட்டது. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரியத் தற்காலிக உத்தேச வினைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் தேர்வு எழுதியவர்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Quotion Paper TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபனை தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.