தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் தேர்வுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு! - pc exam result

காவலர் தேர்வுக்கான எழுத்து தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.

Tnsurb released pc exam result today
காவலர் தேர்வுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு

By

Published : Feb 19, 2021, 7:48 PM IST

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில், காவல், சிறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் 11,813 காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்தாண்டு டிசமபர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களின் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வினை 5,50,314 பேர் எழுதினர்.

இந்நிலையில், அடுத்த கட்டத் தேர்வான அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் போட்டி 1:5 விகிதத்தில் கலந்துகொள்வதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் இன்று (பிப்ரவரி 19) வெளியிடப்பட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக் கடிதம் இதே இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

விண்ணப்பதாரர்கள் அந்த அழைப்புக் கடிதத்தை அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்னர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திலும் முறைகேடா? - தேர்வர்கள் புகார்

ABOUT THE AUTHOR

...view details