தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலை தீபத்திருவிழா: 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - திருவண்ணாமலை தீபத்திருவிழா

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By

Published : Nov 24, 2022, 9:48 AM IST

சென்னை: திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக பக்தர்கள் செல்லாத நிலை இருந்தது. ஆனால் தற்போது பக்தர்கள் கூட்டம் தீபத்திருவிழா அன்று அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ஆம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. இந்த தீபத்திருவிழாவை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் வருவது வழக்கமான ஒன்றாகும்.

பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. டிசம்பர் 6-ஆம் தேதி மட்டும் 25 லட்சம் பக்தர்களும், மகா தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்களும் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 7ஆம் தேதி பொளர்ணமியும் வரவுள்ளது. இதன் காரணமாக சிறப்பு பேருந்துகளை டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் வருகையை பொருத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மாலை டம் டம்... மங்கள டம் டம்... இந்திய மருமகள் ஆன அமெரிக்கப்பெண்

ABOUT THE AUTHOR

...view details