தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் பண்டிகை சிறப்புப் பேருந்துகளில் இதுவரை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 724 பேர் முன் பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் இன்று (13.01.2020) காலை 08.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,225 பேருந்துகளில் 450 பேருந்துகளும் 82 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.