சென்னை:TNSTC Employees salarytalks based News:குரோம்பேட்டையில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை பணியாளர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான ஊதியம், பல்வேறு படிகள் மற்றும் சலுகைகள் குறித்த 14ஆவது ஊதிய ஒப்பந்த மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையானது போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், தற்போது குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நிதித்துறை இணைச் செயலாளர் அருண் சுந்தர் தயாளன், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் செயலாளர் மற்றும் பதிவு செய்யப்பட்ட 65 தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.