சென்னை: தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணி புரிவதற்கான தகுதித் தேர்வு (TNSET) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்செட் (SET) தேர்வினை நடத்தவுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், “தமிழ்நாட்டில் 12 நகரங்களில் நடைபெறவிருக்கும் இத்தேர்வுக்கு, வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை www.tnsetau.in என்கிற இணைய முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 26 பாடங்களுக்கு செட் (SET) தேர்வுகள் நடத்தப்படும். வழக்கமாக ஓ.எம்.ஆர்.(OMR) தாளில் விடைகளை குறிப்பது போன்று தேர்வு நடைபெறும். கரோனா தொற்று பரவல் குறையாதபட்சத்தில் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும்.