தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 9, 2022, 9:20 AM IST

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: சின்னங்கள் வரைதல், சுவரொட்டிகள் ஒட்டுதலுக்கு அனுமதி இல்லை

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பொது இடங்களில் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள் வைப்பது, கொடிகள் வைப்பது, சின்னங்கள் வரைதல், சுவரொட்டிகள் ஒட்டுவது போன்றவைக்கு அனுமதி இல்லை எனத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் கொடிகள், சின்னங்கள் வரைதல், சுவரொட்டிகள் ஒட்டுவது அனுமதி இல்லை - தேர்தல் ஆணையம்
அரசியல் கட்சிகள் கொடிகள், சின்னங்கள் வரைதல், சுவரொட்டிகள் ஒட்டுவது அனுமதி இல்லை - தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் , 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடத் தேர்தல் நடத்தை விதிகளின்படி, பொது இடங்களில் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல், சுவரொட்டிகள் ஒட்டுவது தொடர்பாகப் பின்வரும் வரையறைகளைத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் கொடிகள், சின்னங்கள் வரைதல், சுவரொட்டிகள் ஒட்டுவது அனுமதி இல்லை - தேர்தல் ஆணையம்

அதில், "எந்த ஒரு அரசு வளாகத்திலும் ( கட்டடங்கள் உட்பட ) சுவர் எழுத்துக்கள், சுவரொட்டிகளை / தாள்களை ஒட்டுதல் அல்லது வேறு விதங்களில் உருக்குலைத்தல் அல்லது கட்-அவுட்கள், விளம்பரப் பலகைகள், பதாகைகள், கொடிகள் முதலியவற்றை வைத்தல் / காட்சிப்படுத்துதல் ஆகியவை அனுமதிக்கப்படக்கூடாது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு திறந்தவெளிகள் ( உருக்குலைப்புத் தடுப்பு ) சட்டம், 1959இல் பார்வையில்படும் பொது இடங்கள் என்பது, ஒரு பொது இடத்தில் இருக்கும் அல்லது கடந்து செல்லும் ஒரு நபரின் பார்வையில்படும் தனியார் இடம் / கட்டடம் அடங்கும். இத்தகைய இடங்களில் உரிமையாளரின் அனுமதியிருந்தாலும், சுவரில் எழுதுவதோ, சுவரொட்டி போன்றவற்றை ஒட்டுவதோக் கூடாது.

அரசியல் கட்சிகள் கொடிகள், சின்னங்கள் வரைதல், சுவரொட்டிகள் ஒட்டுவது அனுமதி இல்லை - தேர்தல் ஆணையம்

ஓர் இடத்தின் உரிமையாளரின் சம்மதம் பெறப்பட்டுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில் எந்த சூழ்நிலையிலும் சுவரில் எழுதுவதோ அல்லது சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details