தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: தொடரும் பின்னணிகள்!

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார், ஊழியர் ஓம்காந்தன் இருவரையும் மேலும் ஒரு வழக்கில் சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: தொடரும் பின்னணிகள்!
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: தொடரும் பின்னணிகள்!

By

Published : Feb 27, 2020, 7:39 PM IST

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2ஏ, குரூப் 4, விஏஓ ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேட்டிற்கு இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம் காந்தன் ஆகியோருக்குத் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே குரூப் 2ஏ, குரூப் 4 முறைகேடுகள் தொடர்பாகத் தனித்தனி வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி அலுவலர்கள் மீண்டும் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் விஏஓ தேர்வு முறைகேடு வழக்கில் ஜெயக்குமார், ஓம்காந்தனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் இன்று முன்னிலைப்படுத்தினர். அவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை பதினோறாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் ராஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே குரூப் 2 தேர்வு முறைகேட்டில் காவலில் எடுக்கப்பட்ட அவர்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விஏஓ தேர்வு முறைகேட்டில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...மதுரை - டு - சிங்கப்பூர்: பறக்கத் தயாராகும் ஜில் ஜில் ஜிகர்தண்டா... #Exclusive

ABOUT THE AUTHOR

...view details