சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் - 2 நேர்முகத் தேர்வு , குரூப் - 2 ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான முதன்மை தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணிக்குத் தொடங்கிய தேர்வு 12.30 மணி வரையில் தமிழ் கட்டாய தகுதித் தேர்வு, மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பொது அறிவு விரிவாக எழுதும் தேர்வு நடைபெறவுள்ளது.
TNPSC Group 2: குரூப்-2 தேர்வில் குழப்பம்: டிஎன்பிஎஸ்சி அளித்த விளக்கம்? - salem tnpsc centre
குரூப் - 2 தேர்வு மையங்களில் சில இடங்களில் வினாத்தாள், இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சம்பந்தப்பட்ட மையங்களில் தேர்வு எழுதக் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தெரிவித்துள்ளது.
5 ஆயிரத்து 446 பணியிடங்களுக்கான இந்த தேர்வை 20 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 280 மையங்களில் 55 ஆயிரத்து 71 பேர் எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 32 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், சென்னை, கடலூர், தஞ்சாவூர், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள சில மையங்களில் நுழைவுச்சீட்டு மற்றும் வினாத்தாளில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், தேர்வர்கள் செய்வதறியாமல் தவித்தனர்.
இது குறித்து விளக்கமளித்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், "எந்தெந்த தேர்வு மையங்களில் புகார் எழுந்ததோ அங்கு விரிவாக விசாரணை நடத்தப்படும். அதேநேரத்தில் சம்பந்தப்பட்ட மையங்களில் தாமதமாகத் தொடங்குவதற்கு ஏற்ப தேர்வர்களுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.