தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு - கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை: கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

tnpsc postponding typist counselling due to corona virus precautionary activities
tnpsc postponding typist counselling due to corona virus precautionary activities

By

Published : Mar 18, 2020, 5:45 PM IST

Updated : Mar 18, 2020, 7:45 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பிரிவில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு மார்ச் 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, ஏற்கனவே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், இது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் தனித்தனியே தகவல் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு கலந்தாய்வு

Last Updated : Mar 18, 2020, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details