தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு - chennai lates news

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சிஇணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது;

tnpsc-new-syllabus
tnpsc-new-syllabus

By

Published : Jan 29, 2022, 7:41 PM IST

தமிழ்நாட்டில் அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகிவுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய செயலாளர் பி.உமா மகேஸ்வரி கூறுகையில், “டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி குருப்-2, குருப்-2-ஏ முதல்நிலைத் தேர்வு, குருப்-4, குருப்-3, குருப்-7-பி, குருப்-8 மற்றும் சிறை அலுவலர் தேர்வு, உதவி சிறை அலுவலர் தேர்வு ஆகியவற்றின் தேர்வுக்கான தமிழ் மொழி பாடத்திட்டம் தேர்வாணையத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குருப்-2 மற்றும் குருப்-2-ஏ ஆகிவற்றின் தேர்வுகளுக்கான அதிகாரபூர்வமான நாள் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படவுள்ளது. மேலும், குருப்-4 தேர்வுகளுக்கான அதிகாரபூர்வமான நாள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படவுள்ளது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 27 ஆயிரம் அலுவலர்களுக்கு 24 பயிற்சி மையங்களில் பயிற்சி - ககன்தீப் சிங் பேடி

ABOUT THE AUTHOR

...view details