ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குருப் 4 தேர்வு; சந்தேகங்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு - tnpsc-help-line-number

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக் குறித்த சந்தேகங்களை தெரிந்துக் கொள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

குருப் 4 தேர்வு சந்தேகங்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு
author img

By

Published : Jun 15, 2019, 9:07 AM IST

இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் என மொத்தம் 6491 காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்காக, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்,

”இந்த தேர்வை எழுதுவதற்கு, பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) (தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III பதவிகளுக்கு, கூடுதலாக தட்டச்சு, சுருக்கெழுத்து தொழில் நுட்பக் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் 14.7.2019ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு, 301 மையங்களில் 1. 9.2019 நடைபெறவுள்ளது.

தேர்வாணைய இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். நிரந்தரப் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்தத் தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒருமுறை விண்ணப்பத்தினை சமர்பித்துவிட்டால் அந்த விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் நிலைகுறித்து எவ்வித மாற்றமும் செய்ய இயலாது. விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பம் சமர்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளோ எழ வாய்ப்புள்ளது. மேற்கூறிய காரணங்களால் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசிகட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாதுபோனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பேற்காது. இது குறித்த சந்தேங்களை , 1800-425-1002 044-25332855, 044-25332833 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details