தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் வெளியீடு! - தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா

மருத்துவத்துறையில் தொழில் ஆலோசகர் பதவி, குடிசை மாற்று வாரிய சமூக ஆர்வலர் பதவிக்கான எழுத்துத்தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி ஹால்டிக்கெட் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி ஹால்டிக்கெட் வெளியீடு

By

Published : Nov 4, 2022, 3:13 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டுப்பணியில் அடங்கிய சமூக ஆர்வலர் ஆகியப்பதவிகளுக்கான கம்ப்யூட்டர் மூலம் தேர்வு வரும் 12ஆம் தேதி காலை, மாலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறுகிறது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள், தங்களின் ஒருமுறை பதிவேற்றம் மூலமாக விண்ணப்ப எண், பிறந்ததேதியைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகாெள்ளலாம்' எனத்தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:UPSC வேலைவாய்ப்பு..!

ABOUT THE AUTHOR

...view details