தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது... - டிஎன்பிஎஸ்சி தேர்வு

தமிழ்நாடு அரசு பணிகளில் 7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு இன்று (ஜூலை 24) நடைபெறுகிறது.

Group four exam in all over tamil nadu  Group four exam  TNPSC Group four  TNPSC Group four exam  குரூப் 4 தேர்வு  தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு  டிஎன்பிஎஸ்சி தேர்வு  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
குரூப் 4 தேர்வு

By

Published : Jul 24, 2022, 7:08 AM IST

சென்னை:தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில், 10ஆம் வகுப்பு கல்வி தகுதி நிலையில், காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு இன்று (ஜூலை 24) நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது.

பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடைபெற இருக்கும் இத்தேர்வில், பகுதி ஒன்றில் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்; பகுதி இரண்டில் பொது அறிவில் 75 கேள்விகளும்; மனக்கணக்கு மற்றும் திறன் அறிதல் பகுதியில் 25 கேள்விகளும் என 100 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 316 வட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வினை 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்களும், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண் தேர்வுகளும், 131 திருநங்கைகளும், 27,449 மாற்றுத்திறனாளிகள், 12,644 விதவைகள், முன்னாள் ராணுவத்தினர் 6,635 பேர் எழுத உள்ளனர்.

சிசிடிவி மூலமாகவும் 7,689 இடங்களில் இருந்து வரும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.சென்னையில் 53 மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் எழுதுகின்றனர் . தேர்வினை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்வதற்கான சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வின் போது மின்சாரம் தடை இன்றி வழங்குவதற்கும் மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுத சொல்வார்களுக்கு சிறப்பு போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளி ஆசிரியர்கள் நியமன ஊழல் - மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் சட்டர்ஜி கைது!

ABOUT THE AUTHOR

...view details