தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி துறைத் தேர்வுகளுக்கு விடை குறிப்பு வெளியீடு.! - Tnpsc Group Exam Answer Key Released

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய 143 துறைகளுக்கான தேர்வுக்குரிய உத்தேச விடை குறிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது.

துறைத்தேர்வு விடை குறிப்பு டிஎன்பிஎஸ்சி வெளியிடு Tnpsc Departmental Exam Answer Key Released Tnpsc Group Exam Answer Key Released Tnpsc Exam Answer Key Released
Tnpsc Group Exam Answer Key Released

By

Published : Jan 28, 2020, 9:56 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 143 துறைத் தேர்வுகளுக்கான தேர்வினை சென்னை, டெல்லி உள்ளிட்ட 33 மையங்களில் ஜனவரி ஐந்தாம் தேதி முதல் 12ஆம் தேதிவரை நடத்தியது.

இந்தத் துறை தேர்வுகளின் கொள்குறி வகையைச் சேர்ந்த தேர்வர்களின் வினா தாள்களுடன் கூடிய உத்தேச விடைகள், விரிவான விடையளிக்கும் வகை ஆகியவை தேர்வாணைய இணையதளத்தில் இன்று (28ஆம் தேதி ) வெளியிடப்பட்டுள்ளது. துறைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் அவர்கள் எழுதிய தேர்வின் விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒருவார கால அவகாசத்திற்குள்(பிப்ரவரி 4ஆம் தேதி) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் மறுப்பினை தெரிவிக்கலாம். இணையதளம் மூலம் மட்டுமே பெறக்கூடிய விடைக்குறிப்பு மீதான மறுப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 6491 பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு - 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details