தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி விசாரணை - TNPSC CBCID Investigation

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் மூன்று பேரிடம் சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Cbcid tnpsc டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு, சி.பி.சி.ஐ.டி விசாரணை TNPSC Group-4 Examination Abuse, CBCID Investigation TNPSC CBCID Investigation டி.என்.பி.எஸ்.சி சி.பி.சி.ஐ.டி விசாரணை
TNPSC CBCID Investigation

By

Published : Jan 27, 2020, 6:27 PM IST

Updated : Jan 27, 2020, 8:09 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி கூட்டு குடிமைப்பணி குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. 14 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வின் முடிவுகளடங்கிய தரவரிசைப் பட்டியல் கடந்த நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் சில தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் உள்ளவர்களில் வெளியூர்களைச் சேர்ந்த 39 பேர் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 பேருக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுத ஆயுட்கால தடைவிதிக்கப்பட்டது.

இந்த முறைகேட்டில் பல்வேறு அலுவலர்களும், இடைத்தரகர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், காவல் துறை தலைமை இயக்குநரிடம் கோரிக்கைவைத்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி, டிஎன்பிஎஸ்சி அலுவர்கள், தேர்வர்கள், இடைத்தரகர்கள் எனப் பலரிடம் அடுக்கடுக்கான விசாரணையை நடத்திவருகிறது.

மேலும், இந்த வழக்கில் கடந்த நான்கு நாள்களாக நடத்திய விசாரணையில் அரசுத் தேர்வுகள் இயக்கக அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய ரமேஷ், எரிசக்தித் துறையில் பணிபுரியும் திருக்குமரன், டிஎன்பிஎஸ்சி அலுவலர் ஓம்காந்தன், இடைத்தரகர்களாகச் செயல்பட்ட ஆவடியைச் சேர்ந்த வெங்கட்ரமணன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருவேல் முருகன், கடலூரைச் சேர்ந்த ராஜசேகர், தேர்வர்கள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதீஷ் குமார், ஆவடியைச் சேர்ந்த காலேஷா உள்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று ராமேஸ்வரத்திலிருந்து ஓ.எம்.ஆர். விடைத்தாள்களைச் சென்னைக்கு கொண்டுவருவதற்கு பாதுகாப்பாக வந்த காவலர் உள்பட மூன்று பேரிடம் சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இந்த வழக்கில் கைது நடவடிக்கைகள் தொடரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு - திடுக்கிடும் தகவல்கள், 3 பேர் கைது!

Last Updated : Jan 27, 2020, 8:09 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details