தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: மேலும் 2 பேர் கைது - TNPSC Group 4 exam scam

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மேலும் இருவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் 2 பேர் கைது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு சிபிசிஐடி வெளியீடு TNPSC Group 4 exam scams arrested 2 people TNPSC Group 4 exam scam TNPSC Group 4 exam scams CBCID Release
TNPSC Group 4 exam scam

By

Published : Jan 28, 2020, 7:10 PM IST

Updated : Jan 28, 2020, 7:22 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (25), கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா தனலட்சுமி நகரைச் சேர்ந்த சிவராஜ் (31) ஆகியோர் இடைத்தரகர்கள் மூலம் தலா ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து முறைகேடு செய்து தேர்ச்சிப்பெற்ற இருவரையும் சிபிசிஐடி காவல் துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

குரூப் 4 தரவரிசைப்பட்டியல் வெளியானபோது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக அளவில் 100 இடங்களில் வந்து முறைகேடு குறித்த புகாரின்பேரில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுவரை முறைகேடு செய்ததாக 12 பேரை காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிபிசிஐடி அறிக்கை வெளியீடு
Last Updated : Jan 28, 2020, 7:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details