சென்னை: சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுப் பணிகள் துறை வாரியாக நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7,301 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் எழுதினர். இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.
குரூப் 4 தேர்வு எழுதிய சுமார் 18 லட்சம் தேர்வர்கள் முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். தேர்வு முடிவுகளை அறிவிக்கக்கோரி தேர்வர்கள் சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாக்கினர்.