தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குருப்-4 சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தேதி அறிவிப்பு

சென்னை: குரூப்-4 பணியில் கலந்தாய்விற்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வுகளில் தற்போது கூடுதலாக அளிக்கப்பட்ட 27 தேர்வர்கள் மட்டும் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தால் போதுமென தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

tnpsc group 4
tnpsc group 4

By

Published : Feb 16, 2020, 12:12 PM IST

இதுகுறித்து அதன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குரூப்-4 தேர்வுக்கு தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது சான்றிதழ்களை பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.

ஏற்கனவே டிசம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்த தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியான தேர்வர்கள் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் 2020 பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் யாரும் தங்களது சான்றிதழை மீண்டும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய தேவையில்லை. கூடுதலாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 27 தேர்வர்கள் மட்டும் தங்களது சான்றிதழ்களின் நகல்களை இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்தால் போதுமானது. சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய இறுதி தேர்வர்களின் பதிவுகளை 2020 பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்ட கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலில் 47 ஆவது பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சசிகலாவின் பினாமி எனக்கூறி நோட்டீஸ்! வருமான வரித்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details