தமிழ்நாடு

tamil nadu

குரூப் - 4 தேர்வு முறைகேடு - டிஎன்பிஎஸ்சி அலுவலர்கள் விசாரணை தொடக்கம்

By

Published : Jan 13, 2020, 1:19 PM IST

சென்னை: குரூப் - 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

டிஎன்பிசி அலுவலர்கள் விசாரணை தொடக்கம்
டிஎன்பிசி அலுவலர்கள் விசாரணை தொடக்கம்


குரூப் - 4 பணியிடத்தில் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் 35 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அந்த மையங்களில் முறைகேடு நடந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் இன்று விசாரணைக்கு வருமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த மையங்களில் தேர்வு எழுதிய 35க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விசாரணைக்காக வந்துள்ளனர்.

டிஎன்பிசி அலுவலர்கள் விசாரணை தொடக்கம்

அவர்களிடம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் தேர்வு முறைகேடு குறித்து பல்வேறு தகவல் வெளிவர வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி செயலர் தேர்வு மையங்களில் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details