தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2019ஆம் ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது தொடர்பாக, சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
இது தொடர்பாகத் தேர்வு முறைகேட்டிற்கு இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் உள்பட பலரை கைதுசெய்துள்ளனர்.
இதனிடையே, 2018ஆம் ஆண்டும் குரூப் 4 தேர்விலும் ஜெயக்குமார், ஓம்காந்தன் இருவரும் முறைகேடு செய்ய முயற்சிசெய்ததாக, விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது பாதுகாப்புக்குச் சென்ற காவலர் அதிக கவனத்துடன் செயல்பட்டதாலும் அவரை விலைக்கு வாங்க இயலாததாலும் அம்முயற்சியில் தோல்வியடைந்ததாகத் தெரியவந்துள்ளது.