தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி வெளியீடு - குரூப்- 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி வெளியீடு

சென்னை: குரூப்- 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணிஇடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் 19ஆம் தேதி முதல் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

tnpsc exam candidates counselling date announced
tnpsc exam candidates counselling date announced

By

Published : Feb 12, 2020, 9:32 PM IST

Updated : Feb 12, 2020, 10:00 PM IST

குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அந்த செய்திக்குறிப்பில், 'ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-4 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டன.

இதையடுத்து இந்தப் பணிகளுக்கான மூல சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வரும் 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இந்த சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீடு விதி காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தேதி, நேரம், விபரங்கள் அடங்கிய அழைப்பாணை கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மூல சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இறுதித் தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டு மொத்த தரவரிசை, இட ஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், நிலவும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கு வரத் தவறினால், அவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. குரூப்-4 பணியிடங்களில் இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், கிராம நிர்வாக அலுவலர், வரித்தண்டலர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 9 ஆயிரத்து 882 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கலந்தாய்வில் கலந்துகொள்ளுபவர்கள் தங்களது ஆவணங்களை வரும் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை இ-சேவை மையங்களில் பதிவு செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வதந்திகளைப் பரப்புவோருக்கு டிஎன்பிஎஸ்சி கண்டனம்

Last Updated : Feb 12, 2020, 10:00 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details