தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரூப் 2A தேர்வு முறைகேடு: இருவரிடம் சிபிசிஐடி விசாரணை - group 2A exam scam cbcid Inquiry

சென்னை: குரூப் 2A தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி மேலும் இருவரிடம்  தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

cbcid-inquiry
cbcid-inquiry

By

Published : Feb 8, 2020, 6:08 PM IST

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2A தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 42 பேர் முறைகேடு செய்திருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடியினருக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிபிசிஐடியினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தேர்வில் முறைகேடு நடந்திருப்பது விசாரணையில்நிரூபிக்கப்பட்டு குரூப் 2A தொடர்பாக 17 பேரும், குரூப் 4 தொடர்பாக 16 பேரும், வி.ஏ.ஓ தேர்வில் ஒருவரும் என மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக குரூப் 2A மற்றும் குரூப் 4 தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த 6ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதைத்தொடர்நது சிபிசிஐடியினர் அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த ஓம் காந்தன் என்பவரையும் சிபிசிஐடியினர் 5 நாட்கள் காவலில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து குற்றவாளிகளான ஜெயக்குமார், ஓம் காந்தனை சிபிசிஐடியினர் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களுக்கு அழைத்து சென்று தேர்வு தாளில் முறைகேடு செய்தது குறித்து செயல்முறை விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று குரூப் 2A முறைகேடு தொடர்பாக சிபிசிஐடியினர் கரூர் மற்றும் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரை அழைத்துச் சென்று எழும்பூர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மூடி மறைக்கும் எடப்பாடி அரசு - வைரலாகும் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு!

ABOUT THE AUTHOR

...view details