சென்னை:குருப் 2 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (ஜன.11) வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான இடங்களை நிரப்ப உள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வு 2022ஆம் ஆண்டு, மே 21ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் 2022 ஜூன் மாதம் வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, முதன்மை எழுத்துத் தேர்வு 2023 பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்பட்டது. அந்த தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று (ஜன.11) வெளியிடப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.