இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2018ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு 2( நேர்காணல் பதவிகள்) 1, 338 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பெறப்பட்டது. குரூப்-2 பணியில் சேர்வதற்கான முதல்நிலைத் தேர்வு 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்பட்டது.
குரூப் 2 பணிக்கு நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு! - குருப் 2 பணிக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு
சென்னை: குரூப்-2 பணியில் நேர்காணலுக்கு தேர்வான 2,668 நபர்களுக்கு நவம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பங்களில் தெரிவித்துள்ள விபரங்களை சரி பார்க்கும் பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு 2667 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நவம்பர் 6 ந் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
மேலும் இவர்களுக்கான அழைப்பு கடிதத்தை தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேர்காணலில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளத் தவறினால் விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது எனவும் ,அவர்கள் அடுத்த கட்ட பரிசீலனைக்கும் அழைக்கப்பட மாட்டார்கள்” என்றும் கூறியுள்ளார்