டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 12 பேரிடம் நேற்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரமேஷ் (30), 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று எரிசக்தித் துறையில் உதவியாளராகப் பணிபுரிந்து வரக்கூடிய திருக்குமரன் (35), திருவல்லிக்கணியைச் சேர்ந்த நிதிஷ்குமார் (21) உள்ளிட்ட மூன்று பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறைகேடு: மேலும் ஒருவர் கைது! - tnpsc group 2 exam cheating one arrested
சென்னை: டிஎன்பிஎஸ்பி குரூப் 2 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி கடலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு மேலும் ஒருவர் கைது
மேலும், ஒன்பது பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர், குரூப் 2 தேர்வில் மாநில அளவில் 39ஆவது மாணவராகத் தேர்ச்சி பெற்றுது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ. 532 கோடி வரி ஏய்ப்பு - ஒத்துக்கொண்ட வேலம்மாள்!