தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குருப் 2 மற்றும் 2 ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப் பணிகளில் குருப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில் 5ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அரசுப் பணியாளர் தேர்வாணையம்
அரசுப் பணியாளர் தேர்வாணையம்

By

Published : Feb 23, 2022, 3:35 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குருப் 2-ல் 116 காலிப்பணியிடங்களையும், குரூப்-2 ஏ ஆகியவற்றில் 5 ஆயிரத்து 413 பணியிடங்களுக்கும் போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.

இந்தத் தேர்வுகளுக்கு பிப் 23ஆம் தேதியில் இருந்து, மார்ச் மாதம் 23ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் தேர்வுகள் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வுகள் முடிந்த பின்னர் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் அறிவிக்கப்படும்.

குருப் 2 பணியிடங்களுக்கு வயது வரம்பு 01.07.2022 படி நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு அதிகப்பட்சமாக 32 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆதி திராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம், விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு கிடையாது.

ஆனால், அதே நேரத்தில் உச்ச வயது வரம்பு இல்லை என்பது விண்ணப்பதாரர் அறிவிப்பு வெளியிடப்படும் நாளிலோ, பதவிக்கு தேர்வு செய்யப்படும் நாளிலோ, பதவியில் அமர்த்தப்பட்ட நாளன்றோ 60 வயதினை பூர்த்தி செய்திருக்ககூடாது.
முதல்நிலைத் தேர்வுகள் 200 கேள்விகள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகையில் 3 மணி நேரம் நடத்தப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குரூப் 1 பணிக்கான முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details