தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குருப் 2ஏ தேர்வு முறைகேடு எதிரொலி: பத்திரப்பதிவுத் துறையைச் சேர்ந்த 6 ஊழியர்கள் இடைநீக்கம் - TNPSC Group 2 A exam

சென்னை: பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றிவந்த ஆறு ஊழியர்களை குரூப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுப்பட்டதாகக் காவல் துறையினர் கைது செய்ததையடுத்து ஆறு பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குருப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட பத்திரப்பதிவுத்துறை சேர்ந்த 6 பேர் இடைநீக்கம்!
குருப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட பத்திரப்பதிவுத்துறை சேர்ந்த 6 பேர் இடைநீக்கம்!

By

Published : Feb 6, 2020, 5:15 PM IST

Updated : Feb 6, 2020, 5:34 PM IST

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு குறித்து தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் செயலாளர், சிபிசிஐடி காவல் துறையிடம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி புகார் அளித்தார். இந்தப் புகாரில் முறைகேட்டில் ஈடுபட்டு 42 பேர் அரசுப் பணிகளில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி காரைக்குடி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த வேல்முருகன், திருநெல்வேலி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த ஜெயராணி ஆகியோரைக் கைது செய்தனர்.

அரசுப் பணியாளர் தேர்வு நடத்தை விதிமுறைகளின்படி, காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் 48 மணி நேரத்திற்கும் மேல் காவல்துறை பாதுகாப்பிலிருந்தால், அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் காரைக்குடி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்துவந்த வேல்முருகன், திருநெல்வேலி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்துவந்த ஜெயராணி ஆகியோரை பத்திரப்பதிவுத் துறைத் தலைவர் ஜோதி நிர்மலா ஏற்கனவே இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது, தூத்துக்குடி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த சுதா, சென்னைப் பட்டினம்பாக்கத்தில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்துவந்த ஞானசம்பந்தம், செங்குன்றத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிவந்த ஆனந்தன், காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றிவந்த வடிவு ஆகிய நான்கு பேரை பத்திரப்பதிவுத்துறை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து, அத்துறையின் தலைவர் ஜோதி நிர்மலா தற்போது உத்தரவிட்டுள்ளார்.

அரசு உத்தரவு

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு: சிபிசிஐடியிடம் சிக்கிய சித்தாண்டி

Last Updated : Feb 6, 2020, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details