தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 பணியில் அடங்கிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வரும் 20ஆம் தேதி வெளியிடுகிறது. தேர்வர்கள் ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடத்தப்படும்.
குரூப்-1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விபரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விபரங்கள் வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net, www.tnpsc.exam.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்' எனக் கூறியுள்ளார்.