கரோனா பரவல்: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகள் ஒத்திவைப்பு! - TNPSC Examination postponed
13:19 May 08
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வரும் 28,29,30 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் கடந்த சில நாள்களாக உச்சத்தில் உள்ளது. வைரல் பரவலைக் கட்டுப்படுத்த, வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, குரூப் 1-க்கான முதன்மைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், “கரோனா பரவல் காரணமாக, மே 28,29,30 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் - 1 முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. அதே போல ஜூன் 6 இல் நடக்கவிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி பதவிக்கான தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஜூன் 5 இல் நடக்கவிருந்த ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.